TNPSC Thervupettagam

உலக காசநோய் அறிக்கை 2022

November 6 , 2022 624 days 352 0
  • உலக சுகாதார அமைப்பானது 2022 ஆம் ஆண்டிற்கான உலக காசநோய் அறிக்கையினை வெளியிட்டது.
  • உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய அளவில் காச நோயைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் காசநோய் என்ற தொற்றுநோய் மீதான பல்வேறு நாடுகளின் முன்னேற்றம் பற்றிய விரிவான மதிப்பீட்டை வழங்குவதற்காக ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில் 10.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • 2020 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும் போது இது 4.5 சதவீதம் அதிகம் ஆகும்.
  • 6 மில்லியன் மக்கள் காசநோயால் உயிரிழந்துள்ளனர்.
  • இவர்களில் 187,000 பேர் எச்.ஐ.வி நோயாளிகள் ஆவர்.
  • 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மருந்துகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட காசநோயின் (DR-TB) பாதிப்பு 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • கடந்த ஆண்டு, 450 000 புதிய ரிஃபாம்பிசின் மருந்திற்கு எதிர்ப்புத் திறன் கொண்ட காச நோய் (RR-TB) பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன.
  • 2019 ஆம் ஆண்டில் 7.1 மில்லியனாக இருந்த காசநோய்ப் பாதிப்புகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 5.8 மில்லியனாகக் குறைந்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் இந்த நிலைமை மாறியதோடு 6.4 மில்லியன் மக்கள் இந்த காச நோயினால் பாதிக்கப் பட்டனர்.
  • 2019 ஆம் ஆண்டில் 6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அத்தியாவசிய காசநோய் சேவைகளுக்கான உலக நாடுகளின் செலவானது 2021 ஆம் ஆண்டில் 5.4 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய இலக்கான 13 பில்லியன் அமெரிக்க டாலர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாகும்.
  • கடந்த 10 ஆண்டுகளில், 2021 ஆம் ஆண்டில் காசநோய் சேவைகளுக்காக வழங்கப்பட்ட நிதியில் 79 சதவீதம் உள்நாட்டு வருவாய் மூலங்களிலிருந்து பெறப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்