உலக காசநோய் தினமானது ஒவ்வொரு வருடமும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
இது உலகளாவிய தொற்று நோயான காசநோய் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நோயை அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தினமானது 1882 ஆம் ஆண்டு டாக்டர் ராபர்ட் கோச் காசநோய்க்கு காரணமான TB பாசில்லஸை கண்டறிந்ததாக அறிவித்த தினத்தை நினைவு கூறுகின்றது.
2019 ஆம் ஆண்டு காசநோய் தினத்திற்கான கருத்துருவானது, “இதுவே நேரம்” என்பதாகும்.
2019 ஆம் ஆண்டு காசநோய் தினத்தை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனமானது உலகளாவிய நிதியம் மற்றும் ஸ்டாப் டிபி கூட்டிணைவுடன் இணைந்து “அனைவரையும் கண்டுபிடி, சிகிச்சையளி. TBயை ஒழி” (Find. Treat. All. #EndTB) எனும் கூட்டு முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது.