உலகளாவிய தொற்றுநோயான காசநோயைப் பற்றியும் அந்நோயை அகற்றுவதற்கான முயற்சிகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
டாக்டர் ராபர்ட் கோச் என்பவர் இதே நாளில் தான் காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியத்தைக் கண்டுபிடித்து அதை உலகிற்குத் தெரியப்படுத்தினார்.
உலக சுகாதார தினம், உலக இரத்த தான தினம், உலக நோய்த்தடுப்பு வாரம், உலக மலேரியா தினம், உலக புகையிலை எதிர்ப்பு நாள், உலக ஹெப்படைடிஸ் தினம் மற்றும் உலக எய்ட்ஸ் தினம் ஆகியவற்றுடன் சேர்த்து உலக சுகாதார அமைப்பு (WHO) அனுசரிக்கும் எட்டு அதிகாரப்பூர்வ உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ஆண்டிற்கான உலக காசநோய் தினத்தின் கருப்பொருள் "காசநோய் முடிவுக்கு வரும் நேரம் இது" என்பதாகும்.