TNPSC Thervupettagam

உலக காண்டாமிருக தினம் – செப்டம்பர் 22

September 26 , 2022 699 days 261 0
  • ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் வாழும் 5 காண்டாமிருக இனங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
  • முதலாவது உலக காண்டாமிருக தினமானது 2010 ஆம் ஆண்டில் உலக வனவிலங்கு நிதியத்தின் தென்னாப்பிரிக்கப் பிரிவினால் அறிவிக்கப்பட்டது.
  • IUCN பட்டியலில் ஐந்து காண்டாமிருக இனங்களின் நிலை
    • ஜாவா காண்டாமிருகங்கள்: மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன
    • சுமத்ரா காண்டாமிருகங்கள்: மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன
    • கருப்பு காண்டாமிருகங்கள்: மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன
    • வெள்ளை காண்டாமிருகங்கள்:  அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடிய நிலையில் உள்ளன
    • பெரிய ஒற்றை கொம்பு காண்டாமிருகம்: பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன
  • உலகில் உள்ள பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் மொத்த எண்ணிக்கையில் 80 சதவீத காண்டாமிருகங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்