இந்த வருடாந்திரக் கொண்டாட்டமானது, ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்று கொண்டாடப் படுகிறது.
இது கால்நடை மருத்துவர்களின் முக்கியத்துவம் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியம், நலன் மற்றும் பொது சுகாதாரத்தில் அவர்களின் பங்களிப்புகள் பற்றி ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, கால்நடை மருத்துவத் தொழிலில் பன்முகத் தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத் தன்மை ஆகியவற்றினை ஊக்குவித்தல் என்பதாகும்.
உலகக் கால்நடை தினமானது, முதலில் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
இது உலக கால்நடை மருத்துவச் சங்கத்தின் (WVA) ஒரு முன்னெடுப்பாகும்.