சீனாவில் நடைபெற்ற கிப்பன் குரங்கு இனங்கள் குறித்த உலகளாவிய நிகழ்வில், இந்தியாவின் மனிதக் குரங்கு இனத்திற்கு வழங்கப்பட்ட வளங்காப்பு அந்தஸ்தானது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலக் காடுகளில் வாழும் அனைத்து மனிதக் குரங்கு இனங்களிலும் கிப்பன் வகை குரங்கு இனங்கள் மிகச்சிறியவை மற்றும் வேகமாக செயல்படக் கூடியவையாகும்.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் மட்டுமே பிரத்யேகமாக காணப்படும் ஹூலாக் கிப்பன் இனமானது, பூமியில் உள்ள 20 வகையான கிப்பன் இனங்களில் ஒன்றாகும்.
ஹூலாக் கிப்பன் இனங்களின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையானது 12,000 ஆகும்.
அனைத்து 20 கிப்பன் இனங்களும் அழிந்து விடும் அபாயத்தில் உள்ளன.
2020 ஆம் ஆண்டு சர்வதேச கிப்பன் தின நிகழ்வில் உலக கிப்பன் குரங்கின வலை அமைப்பு தொடங்கப் பட்டது.