மூன்றாவது உலக கிஸ்வாஹிலி மொழி தினமானது இந்த ஆண்டு கொண்டாடப் பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Kiswahili: Education and Culture of Peace" என்பதாகும்.
230 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த மொழியைப் பேசுவதால், உலகில் மிக அதிகம் பேசப்படும் பத்து மொழிகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
கிஸ்வாஹிலி மொழி என்பது ஆப்பிரிக்க மொழிக் குடும்பத்தில் பரவலாகப் பயன்படுத்தப் படும் மொழிகளில் ஒன்றாகும் என்பதோடு இது ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில் மிகவும் பரவலாகப் பேசப்படுகிறது.