TNPSC Thervupettagam

உலக குடிமைப் பாதுகாப்பு தினம் - மார்ச் 01

March 6 , 2024 136 days 173 0
  • உலக குடிமைப் பாதுகாப்பு தினம் ஆனது 1990 ஆம் ஆண்டில், சர்வதேச குடிமைப் பாதுகாப்பு அமைப்பால் அறிவிக்கப்பட்டது.
  • விபத்துக்கள், இயற்கை பேரிடர்கள் மற்றும் பிற நெருக்கடிகளில் இருந்து மக்களையும் அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பதை ஊக்குவிப்பதை இந்த நாள் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மனித உயிர்களைக் காப்பாற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வீரர்களைக் கொண்டாடும் விதமாகவும் இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேசக் குடிமைப் பாதுகாப்புஅமைப்பை நிறுவியது.
  • இது உலகளவில் குடிமைப் பாதுகாப்பு வீரர்களின் முயற்சிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "பாதுகாப்பு வீரர்களை கௌரவப் படுத்துதல் மற்றும் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்