இயற்கைப் பேரழிவுகள், விபத்துக்கள் மற்றும் பிற அவசரநிலைகளில் இருந்து மக்களையும் அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பதில் குடிமைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத் தினமானது பல குடிமைப் பாதுகாப்பு அமைப்புகளின் பணியைக் கௌரவிக்கச் செய்கிறது.
சமூகங்களைப் பாதுகாப்பதிலும் உயிர்களைக் காப்பாற்றச் செய்வதிலும் இந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் இந்தத் தினம் அங்கீகரிக்கிறது.
இந்தத் தினமானது, முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் சர்வதேசக் குடிமைப் பாதுகாப்பு அமைப்பினால் (ICDO) கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு "இடர் மதிப்பீட்டில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்கு" என்பதாகும்.