TNPSC Thervupettagam

உலக குத்துச்சண்டை அமைப்பில் இணையும் புதிய உறுப்பினர்கள்

August 30 , 2023 323 days 211 0
  • உலக குத்துச்சண்டை என்பது குத்துச் சண்டை விளையாட்டை நடத்தச் செய்வதற்காக சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) அங்கீகாரத்தை கோரும் ஒரு புதிய அமைப்பாகும்.
  • கனடா, பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, ஹோண்டுராஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் தேசியக் கூட்டமைப்புகள் இந்த அமைப்பில் புதிதாக இணைந்துள்ளன.
  • இது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியது.
  • நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை ஏற்கனவே இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
  • முன்னதாக நிர்வாகம், நிதி மற்றும் விளையாட்டுச் சீர்திருத்தங்கள் சார்ந்த பல்வேறு விதிமுறைகளை நிறைவேற்றத் தவறியதற்காக ரஷ்யா தலைமையிலான சர்வதேசக் குத்துச் சண்டை சங்கத்தின் அங்கீகாரத்தினை சர்வதேச ஒலிம்பிக் குழு ரத்து செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்