TNPSC Thervupettagam

உலக குறுங்கோள் தினம் - ஜூன் 30

June 30 , 2024 18 days 76 0
  • இத்தினமானது குறுங்கோள்கள் மற்றும் அவை நமது கிரகத்திற்கு ஏற்படுத்தக்கூ டிய ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 1908 ஆம் ஆண்டில் நிகழ்ந்த துங்குஸ்கா நிகழ்வின் மீதான ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • ஒரு குறுங்கோள் அல்லது வால்நட்சத்திரத்தின் துண்டு பகுதி வெடித்து ரஷ்யாவின் சைபீரியப் பகுதியின் மீது மோதி சுமார் 2,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலான காடுகளை அழித்தது.
  • குறுங்கோள்களின் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பல ஆபத்துகள் குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையானது 2016 ஆம் ஆண்டில் அதிகாரப் பூர்வமாக இத்தினத்தினை அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்