குறுங்கோள்களின் மோதல்களின் அபாயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதற்காக மேற்கொள்ளப்படக் கூடிய பல்வேறு நெருக்கடி கால தகவல் தொடர்பு நடவடிக்கைகள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதும் இதன் நோக்கம் ஆகும்.
1908 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியன்று ரஷ்யக் கூட்டமைப்பின் சைபீரியா பகுதியில் துங்குஸ்கா என்ற குறுங்கோள் மோதியதன் ஆண்டு நிறைவை இந்த நாள் குறிக்கிறது.
இந்த நாளில், ரஷ்யாவின் சைபீரியாவில், பூமியின் மேற்பரப்பில் ஒரு விண்கல் மோதி 2,150 சதுர கிலோமீட்டர் வனப் பகுதியினை நாசம் செய்தது.
தற்போது வரை அறியப்பட்ட பல குறுங்கோள்களின் எண்ணிக்கை 1,297,954 என நாசா தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “குறுங்கோள் கண்டுபிடிப்பு” என்பது ஆகும்.