TNPSC Thervupettagam

உலக குழந்தைகள் 2023 - அறிக்கை

April 27 , 2023 578 days 305 0
  • யுனிசெஃப் இந்தியா அமைப்பானது, "உலகக் குழந்தைகளின் நிலை 2023: ஒவ்வொரு குழந்தைக்கும், நோய்த் தடுப்பினை வழங்குதல்" என்ற தலைப்பிலான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • உலகிலேயே தடுப்பூசி வழங்கீட்டில் அதிக நம்பிக்கைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது.
  • ஒடிசாவில், 90.5 சதவீத குழந்தைகள்  நோய்த் தடுப்பு மருந்தின் முழுத் தவணைகளையும் பெற்றுள்ளனர் என்ற நிலையில் இது 76.4 சதவீதம் என்ற அளவில் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.
  • இந்த மதிப்பீட்டில் இடம் பெற்ற 55 நாடுகளில் சீனா, இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசிகளின் முக்கியத்துவம் உறுதியான முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த மதிப்பீட்டில் இடம் பெற்ற மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் (கொரியக் குடியரசு, பப்புவா நியூ கினியா, கானா, செனேகல் மற்றும் ஜப்பான்) பெருந்தொற்று தொடங்கிய பிறகு, தடுப்பூசி மீதான நம்பிக்கை இழப்பு பதிவாகியுள்ளது.
  • 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மொத்தம் 67 மில்லியன் குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் வழங்கப் படவில்லை.
  • 112 நாடுகளில் தடுப்பூசி வழங்கீட்டுப் பரவலின் அளவுகள் குறைந்து வருகின்றன.
  • 2022 ஆம் ஆண்டில், தட்டம்மை நோய்ப் பாதிப்புகளின் எண்ணிக்கையானது, முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டில், போலியோ பாதிப்பினால் முடக்கு வாதம் ஏற்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையானது  ஆண்டிற்கு ஆண்டு என்ற வீதத்தில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • 2019 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தினை முந்தைய மூன்றாண்டு காலத்துடன் ஒப்பிடும் போது, போலியோ பாதிப்பினால் முடக்கு வாதம் ஏற்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையானது எட்டு மடங்கு அதிகரித்துள்ளது.
  • ஏழ்மை மிக்க குடும்பங்கள் பிரிவில், 5 குழந்தைகளில் 1 குழந்தை என்ற அளவிற்கு ஒரு தவணைத் தடுப்பூசியினைக் கூட பெறாதவர்களாக உள்ள நிலையில், பணக்காரர்கள் பிரிவில் இது 20 குழந்தைகளில் 1 குழந்தை என்ற அளவில் உள்ளது.
  • குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்தச் சவால்கள் அதிகமாக நிலவுகின்ற நிலையில், இந்த நாடுகளில் உள்ள நகர்ப்புறங்களில் வாழும் 10 குழந்தைகளில் 1 குழந்தை என்ற அளவில் ஒரு தவணை தடுப்பூசியினைக் கூட பெறாத நபர்களாக உள்ளதோடு, இது கிராமப்புறங்களில் 6 குழந்தைகளுக்கு 1 குழந்தை என்ற அளவிலேயே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்