TNPSC Thervupettagam

உலக கேட்புத் திறன் தினம் – மார்ச் 03

March 5 , 2021 1274 days 402 0
  • இந்தத் தினமானது கேட்புத் திறன் இழப்பு மற்றும் காது கேளாமையை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் உலகம் முழுவதும் காது மற்றும் செவித்திறன் நலன் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப் படுகின்றது.
  • உலக சுகாதார நிறுவனமானது இந்த வருடாந்திர உலகக் கேட்புத்திறன் தின நிகழ்வை ஏற்படுத்துகின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அனைவருக்குமான கேட்புத்திறன்! சோதனை செய்தல், மீட்டெடுத்தல், தகவல் தெரிவித்தல்” என்பதாகும்.
  • உலகக் கேட்புத் திறன் தினம் – 2021 ஆனது கேட்புத்திறன் குறித்த முதலாவது உலக அறிக்கை வெளியிடப் பட்டதைக் குறிக்கின்றது.
  • இந்த அறிக்கையின்படி, 2050 ஆம் ஆண்டில் 4ல் 1 நபர் செவித் திறன் குறைபாட்டைக் கொண்டிருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்