மலேரியா, மஞ்சள் காய்ச்சல், டெங்கு, சிக்குன்குனியா போன்ற கொசுக்களால் பரவக் கூடிய பல்வேறு நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
1897 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று, சர் ரொனால்ட் ராஸ் என்பவர் ஒரு பெண் அனாபிலிஸ் கொசுவின் வயிற்றில் மலேரியா ஒட்டுண்ணி ஒன்று இருப்பதைக் கண்டு அறிந்தார்.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Accelerating the fight against malaria for a more equitable world" என்பதாகும்.