TNPSC Thervupettagam

உலக கொசு தினம் – ஆகஸ்ட் 20

August 22 , 2021 1103 days 440 0
  • மலேரியா ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் உலக கொசு தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • மலேரியாவினால் ஏற்படும் நோய்களை எதிர்கொள்வதில் பணியாற்றி வரும் சுகாதார நல அலுவலர்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் இதர சிலரின் முயற்சிகளை குறிப்பிட்டுக் காட்டுவதற்காக வேண்டி இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்த ஆண்டு இத்தினத்திற்கான கருத்துரு, மலேரியா அற்ற நிலை எனும் இலக்கை அடைதல்என்பதாகும்.
  • மேலும், இத்தினமானது 1897 ஆம் ஆண்டில், பெண் கொசுக்கள் மனிதர்களிடையே மலேரியாவைப் பரப்புகின்றன என்பதைக் கண்டுபிடித்த பிரித்தானிய மருத்துவர் சர் ரொனால்டு ரோஸ் என்பவருடைய கண்டுபிடிப்பினையும் நினைவு கூறுகிறது.
  • 1902 ஆம் ஆண்டில் ரோஸ் அவர்கள் மருத்துவத்திற்கான நோபல் பரிசினைப் பெற்று, இந்த விருதினைப் பெற்ற முதல் பிரித்தானியர் எனும் பெருமையைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்