TNPSC Thervupettagam

உலக சதுப்பு நில தினம் - பிப்ரவரி 02

February 4 , 2024 167 days 163 0
  • மனித உயிர்களுக்கும் புவிக்கும் சதுப்பு நிலங்கள் கொண்டுள்ள பெரு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சதுப்பு நிலங்கள் ஆனது சேற்று நிலங்கள், ஈரமான புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், பவளப் பாறைகள் மற்றும் அலையாத்தி நிலங்கள் ஆகியவற்றைக் கொண்ட நன்னீர் அல்லது கடல் அல்லது கடலோரப் பகுதிகளாக இருக்கலாம்.
  • சதுப்பு நிலங்கள் பூமியின் ஆறு சதவீதப் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது,  ஆனால் நாற்பது சதவீதத்திற்கும் அதிகமான விலங்கு மற்றும் தாவர இனங்கள் சதுப்பு நிலங்களில் வாழ்கின்றன மற்றும் இனப்பெருக்க நடவடிக்கையினை மேற்கொள்ளச் செய்கின்றன.
  • ஈரான் நாட்டில் உள்ள ராம்சர் என்ற ஒரு நகரின் பெயரால் பெயரிடப்பட்ட ராம்சர் உடன்படிக்கை, சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • இந்த ஒப்பந்தமானது 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் தேதியன்று கையெழுத்தானது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ஈரநிலங்களும் மனித நல்வாழ்வும் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்