TNPSC Thervupettagam

உலக சமத்துவமின்மை அறிக்கை

December 16 , 2017 2407 days 837 0
  • உலக சமத்துவமின்மை அறிக்கை (World Inequality Report) ஆனது பாரிஸின் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸ்-ல் அமைந்துள்ள உலக சமத்துவமின்மை ஆய்வகத்தால் (World Inequality Lab) வெளியிடப்படுகின்றது.
  • உலகில் நிலவும் சமத்துவமின்மையின் பரிமாணங்கள் மீதான ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
  • இந்த அறிக்கையின் படி, 1980ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் 27 சதவீத புது வருமான பெருக்கமானது ஒரு சதவீத பணக்காரர்களால் கைக்கொள்ளப்பட்டு உள்ளது.
  • அதே வேளையில் வெறும் 13 சதவீத வளர்ச்சி வருமானப் பெருக்கத்தை மட்டுமே உலகின் 50% ஏழைகள் அடைந்துள்ளனர்.
  • இந்த அறிக்கையில் இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மையும் முன்னிலைப்படுத்தி காட்டப்பட்டு உள்ளது.
  • 2014ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த 56% வருமான உற்பத்தியை 10 சதவீத பெரும் பணக்காரர்கள் அடைந்துள்ளனர்.
  • 1980ஆம் ஆண்டிற்கு பின் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள திறந்த சீர்திருத்தங்கள் மற்றும் கட்டுப்பாடு நீக்கமே (deregulation) கணிசமான சமத்துவமின்மை அதிகரிப்பின் காரணம் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்