இது ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர கொண்டாட்டமாகும்.
இது உலகளவில் பல்வேறு மதச் சமூகங்களிடையே அமைதி மற்றும் பெரும் புரிதலை ஊக்குவிப்பதற்கான ஒரு தளமாகச் செயல்படுகிறது.
2010 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் இந்த வாரக் கொண்டாட்டம் நிறுவப் பட்டது.
இந்த ஒரு வாரக் கொண்டாட்டமானது, பல்வேறு சமய நம்பிக்கைகளுக்கு இடையே பேச்சுவார்த்தை, மரியாதை மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் பெரும் கவனம் செலுத்துகிறது.
இது குடிமக்களை நல்லிணக்க உணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சிந்திக்கவும் நடவடிக்கை எடுக்கவும் ஊக்குவிக்கிறது.