இது முதன்முதலில் இந்தியாவில் 1969 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
இந்தத் தினமானது புகழ்பெற்ற சமஸ்கிருத இலக்கணப் புலவர் மற்றும் அறிஞரான பாணினியின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
பாணினி என்ற மொழியியலாளர் அஷ்ட தியாயி என்ற, எட்டு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு இலக்கண வழிகாட்டி நூலினை எழுதியுள்ளார்.
இந்தியாவின் பழமையான சமஸ்கிருதக் கல்லூரி, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் போது 1791 ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரியான ஜோனாதன் டங்கன் என்பவரால் நிறுவப்பட்ட பெனாரஸ் சமஸ்கிருதக் கல்லூரி ஆகும்.
இந்த முயற்சிக்குத் தலைமை ஆளுநர் கார்ன்வாலிஸ் பிரபு அனுமதி வழங்கினார்.
2004 ஆம் ஆண்டில் தமிழ் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட பிறகு 2005 ஆம் ஆண்டில் சமஸ்கிருதம் இந்தியாவின் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.