ஒரு நாட்டின் மக்களுக்கிடையேயும் உலகில் நாடுகளுக்கிடையேயும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்திட பிப்ரவரி 20-ஆம் தேதி உலகம் முழுவதும் உலக சமூக நீதி தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறன்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த தினத்தை 2007-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 26-ஆம் தேதி அங்கீகரித்தது. 2009-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் சமூக நீதி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
சமூக நீதியானது எவ்வாறு வறுமையை ஒழிப்பதிலும் வேலைவாய்ப்பை உயர்த்துவதிலும் சமூக ஒருங்கிணைப்பைக் கொண்டு வருவதிலும் செயலாற்றுகின்றது என்பதை மக்களிடையே ஊக்கப்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.
2019-ஆம் ஆண்டிற்கான உலக சமூக நீதி தினத்தின் கருத்துரு “நீங்கள் சமாதானத்தையும் வளர்ச்சியையும் விரும்பினால் சமூக நீதிக்காகப் பணியாற்றுங்கள்” என்பதாகும்.