சமூக அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பவும், பாலினம், இனம், சமத்துவமின்மை, மதப் பாகுபாடு போன்றவற்றில் நிலவும் தடைகளை அகற்றவும் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
இது உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் சமூக அநீதியை எடுத்துரைப்பதோடு, அதற்கான தீர்வுகள் மற்றும் மேம்பாடுகளை வெளிக் கொணரவும் செய்கிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: "தடைகளை எதிர்கொள்ளுதல் மற்றும் சமூக நீதிக்கான வாய்ப்புகளை வெளிக் கொணர்தல்" என்பதாகும்.