சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) ஆனது உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏதோவொரு வகையான சமூகப் பாதுகாப்பு நலத் திட்டத்தின் கீழ் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
“உலக சமூகப் பாதுகாப்பு அறிக்கை 2024–26: பருவநிலை நடவடிக்கை மற்றும் ஒரு முறையான மாற்றத்திற்கான உலகளாவிய சமூகப் பாதுகாப்பு” என்ற ஒரு தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடபட்டுள்ளது.
உலக மக்கள்தொகையில் 52.4 சதவீதம் பேர் தற்போது குறைந்தபட்சம் ஒரு சமூகப் பாதுகாப்புப் பலனையாவது பெற்றுள்ளனர் என்ற நிலையில் இது 2015 ஆம் ஆண்டில் 42.8 சதவீதமாக இருந்தது.
பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப் படக் கூடிய நிலையில் உள்ள 20 நாடுகளில், 91.3 சதவீத மக்கள் (364 மில்லியன்) எந்த விதமான சமூகப் பாதுகாப்பையும் கொண்டு இருக்க வில்லை.
உலகளவில், 54.6 சதவீத ஆண்களுடன் ஒப்பிடச் செய்கையில், 50.1 சதவீதப் பெண்கள் குறைந்த பட்சம் ஒரு சமூகப் பாதுகாப்புப் பலனையாவதுப் பெற்றுள்ளனர்.
0 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 28.2 சதவீதம் பேர் மட்டுமே குழந்தை அல்லது குடும்பப் பணப் பலன்களை (நிதி சார் பலன்கள்) பெறுகின்றனர்.
இதனால் 1.4 பில்லியன் குழந்தைகள் சமூகப் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர்.
அதிக வருமானம் கொண்ட நாடுகள் சமூகப் பாதுகாப்பிற்காக (சுகாதாரம் தவிர்த்து) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக சும்மார் 16.2 சதவீதத் தொகையினை செலவிடுகின்றன.
ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் வெறும் 0.8 சதவீதத்தையே சமூகப் பாதுகாப்பிற்காகச் செலவிடுகின்றன.