ஒவ்வோர் ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை, குறிப்பாக ஏழை மக்கள் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள மக்களைப் பாதிக்கும் இந்த அதிகம் அறியப்படாத நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற 72வது உலக சுகாதாரச் சபையானது இந்நாளை இந்த நோய்க்கான தினமாக அர்ப்பணித்தது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "சாகாஸ் நோயை ஆரம்பச் சுகாதார நலனுடன் ஒருங்கிணைப்பதற்கான நேரம்" என்பதாகும்.
சாகாஸ் நோயானது, அமெரிக்கன் டிரிபனோசோமியாசிஸ் என்றும் அழைக்கப் படச் செய்கிறது.
1909 ஆம் ஆண்டில், பிரேசிலிய நாட்டினைச் சேர்ந்தக் குழந்தைக்கு இந்த நோய் ஏற்பட்டு உள்ளதை முதன்முதலில் கண்டறிந்த மருத்துவர் கார்லோஸ் சாகாஸ் என்பவரின் பெயரால் இந்த நோய்க்குப் பெயரிடப்பட்டது.
ஒரு தொற்றக் கூடிய ஒட்டுண்ணி நோயான இது 6-7 மில்லியன் மக்களைப் பாதித்து உள்ளதோடு, உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 12,000 உயிர்களைப் பறித்தும் உள்ளது.
இது டிரிபனோசோமா க்ரூஸி என்ற ஒட்டுண்ணி புரோட்டோசோவினால் ஏற்படுகிறது.
சாகாஸ் நோய்க்கான தடுப்பூசிகள் தற்போது வரையில் கண்டறியப்படவில்லை.