TNPSC Thervupettagam

உலக சாகாஸ் நோய் தினம் – ஏப்ரல் 14

April 18 , 2021 1230 days 469 0
  • இத்தினம் முதன்முதல் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • இதனை உருவாக்க 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சுகாதார மன்றத்தின் 72வது கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • இந்த நோய் மெதுவாக வளர்வதாலும் அரசியல் ரீதியான பலம் இல்லாத மற்றும் சரியான சுகாதார நலம் இல்லாத ஏழை மக்களையே இது முக்கியமாக பாதிப்பதாலும் இந்நோய் பெரும்பாலும் வெளிக் கொணரப்படுவதில்லை.
  • இந்நோய் உலகம் முழுவதும் உள்ள வளர்ந்து வரும் நாடுகளின் குறைந்த வருமானமுடைய மக்களைப் பாதிக்கும் ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய் (Neglected Tropical disease – NTD) என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • இத்தினம் உலக சுகாதார அமைப்பினால் குறிப்பிடப்பட்ட 11 அலுவல்சார் உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்சாரங்களுள் ஒன்றாகும்.
  • இந்நோய்க்கு பிரேசில் நாட்டின் டாக்டர் கார்ரஸ் ரிபைரோ ஜஸ்டிதியானோ சாகாஸ் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இவர் தான் இந்நோயின் முதல் தாக்குதலை 1909 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று கண்டுபிடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்