TNPSC Thervupettagam

உலக சாரணர் தினம் - பிப்ரவரி 22

February 25 , 2023 643 days 214 0
  • இந்தத் தினமானது சிறார் சாரணர் இயக்கத்தின் நிறுவனர் ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.
  • சாரணர் இயக்கத்தின் தொடக்கமானது, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, 1907 ஆம் ஆண்டில் ஐக்கியப் பேரரசில் தொடங்கப்பட்டது.
  • 1908 ஆம் ஆண்டு பேடன் பவல் என்பவரால் சிறார் சாரணர் இயக்கமானது முதன் முறையாக தொடங்கப்பட்டது.
  • 20 இளைஞர்கள் கொண்ட அமைப்பு சாரா குழுவுடன், முதல் சிறார் சாரணர் முகாமானது பேடன் பவல் பிரபுவால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, சாரணர் இயக்கம் ஆனது 57 மில்லியன் உறுப்பினர்களுடன் 172 தேசிய சாரணர் அமைப்புகளில் பரவியுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "நமது உலகம்: நமது சமமான எதிர்காலம்: சுற்றுச்சூழல் மற்றும் பாலினச் சமத்துவம்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்