உலக சாரணர் தினமானது 1907 ஆம் ஆண்டில் பிரவுன்சியா தீவில் நடத்தப்பட்ட முதலாவது சாரணர் முகாமை நினைவு கூர்கின்றது.
சாரணர் மற்றும் அதன் வழிகாட்டல் நிறுவனரான லார்ட் ராபர்ட் பேடன் - பவல் மற்றும் அவரது மனைவி & உலகத் தலைமை வழிகாட்டியான லேடி ஓலேவ் பேடன் - பவல் ஆகியோரின் பிறந்த நாள் என்பதால் இந்தத் தினமானது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பேடன் பவல் என்பவர் ஒரு ஆங்கிலேய இராணுவ அதிகாரி, எழுத்தாளர், நிறுவனர் மற்றும் உலக அளவிலான சிறுவர் சாரணர் இயக்கத்தின் முதலாவது தலைமை சாரணர் ஆவார்.
1910 ஆம் ஆண்டில் பேடன் - பவல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று சிறுவர் சாரணர் மன்றத்தை உருவாக்கினார்.