TNPSC Thervupettagam

உலக சாலைப் பாதுகாப்பு வாரம்

May 10 , 2019 1969 days 502 0
  • 2019 ஆம் ஆண்டு மே மாதம் 06 ஆம் தேதியிலிருந்து 12 ஆம் தேதி வரை 5வது உலக சாலைப் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த ஆண்டின் கருத்துருவானது, “சாலைப் பாதுகாப்பிற்கான தலைமைப் பண்பு” என்பதாகும்.
  • நமது வாழ்வு பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே சர்வதேச இலக்குகளை அடைய முடியும் என்று ஐ.நா. நம்புகின்றது.
  • இது நடைபெற்று வரும் “உயிர்களைப் பாதுகாத்தல் #அதுகுறித்து பேசு” என்ற பிரச்சாரத்தின் மூலம் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
  • உலக சுகாதார நிறுவனமானது சாலைப் பாதுகாப்பு வாரத்தின் போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது 5 வயது முதல் 29 வயது வரை உள்ள மக்களின் இறப்புக்கு மிக முக்கியக் காரணம் சாலை விபத்துகள் என்று கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்