TNPSC Thervupettagam

உலக சிக்கன நாள்/உலக சேமிப்பு நாள் - அக்டோபர் 31

October 31 , 2019 1795 days 534 0
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதியன்று உலக சிக்கன தினம் அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்த தினமானது உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் நாடுகளின் சேமிப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மக்களிடையே சேமிக்கும் பழக்கமானது மக்களுக்கும் நாட்டிற்கும் தனிச் சுதந்திரத்தை வழங்குகின்றது.
  • 1924 ஆம் ஆண்டில் முதலாவது சர்வதேச சிக்கன காங்கிரஸ் மாநாடானது இத்தாலியில் உள்ள மிலனில் நடத்தப் பட்டது.
  • முதலாவது உலக சிக்கன தினமானது 1925 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மறைந்ததன் காரணமாக இந்தியாவில் இந்தத் தினமானது அக்டோபர் 30 அன்று கொண்டாடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்