ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று உலக சிட்டுக் குருவி தினம் அனுசரிக்கப்படுகிறது.
சிட்டுக்குருவி, நகர்ப்புற சூழலில் வாழும் இதர பொதுப் பறவைகள் மற்றும் அதன் எண்ணிக்கைக்கு ஏற்படும் தீமைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலக சிட்டுக் குருவி தினத்தின் கருத்துரு, “நான் சிட்டுக்குருவிகளை நேசிக்கிறேன்” என்பதாகும்.
பிரான்ஸ் நாட்டினுடைய Eco-Sys ஆக்சன் பவுண்டேசன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பிற தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான கூட்டிணைவோடு நேச்சர் ஃபார் எவர் சொசைட்டி ஆப் இந்தியா எனும் அமைப்பால் தொடங்கப்பட்ட ஓர் சர்வதேச முன்னெடுப்பே உலக சிட்டுக் குருவி தினமாகும்.