TNPSC Thervupettagam

உலக சிட்டுக் குருவி தினம் – மார்ச் 20

March 22 , 2021 1257 days 388 0
  • இத்தினம் பொதுவான வீட்டுக் குருவிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அவற்றைப் பாதுகாப்பதற்காகவும் கடைபிடிக்கப்படும் ஒரு நாளாகும்.
  • பிரான்சு நாட்டினுடைய Eco-Sys Action Foundation என்ற அமைப்புடன் இணைந்து Nature Forever Society of India’ என்ற அமைப்பால் தொடங்கப்பட்ட ஒரு சர்வதேச தொடக்கமே உலக சிட்டுக் குருவி தினமாகும்.
  • ‘Nature Forever Society of India/ என்ற அமைப்பினை ஒரு இந்திய இயற்கை ஆர்வலரான முகமது திலாவார் தொடங்கினார்.
  • அவர் நாசிக்கில் வீட்டுக் குருவிகளுக்கு உதவிகளை செய்வதன் மூலம் இதனை தொடங்கி வைத்தார்.
  • 2021 ஆம் ஆண்டிற்கான உலக சிட்டுக்குருவி தினத்தின் கருத்துரு, “நான் சிட்டுக் குருவிகளை நேசிக்கிறேன்” என்பதாகும்.
  • 2010 ஆம் ஆண்டில் முதல் உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்