உலகளவில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், சிட்டுக் குருவிகளின் பாதுகாப்பு மற்றும் வளங்காப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தச் செய்வதற்காக இத்தினமானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டில் முதல் உலக சிட்டுக்குருவி தினமானது அனுசரிக்கப்பட்டது.
சுற்றுச்சூழலில் சிட்டுக்குருவிகளின் மதிப்பு, மகரந்தச் சேர்க்கையில் அவற்றின் பங்கு மற்றும் பூச்சிகளின் கட்டுப்பாட்டில் அவற்றின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதே இந்தத் தினத்தின் குறிக்கோளாகும்.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "I Love Sparrows" என்பதாகும்.