நேச்சர் ஃபாரெவர் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பானது, உலகெங்கிலும் உள்ள மற்ற அமைப்புகளுடன் இணைந்து 2010 ஆம் ஆண்டில் உலக சிட்டுக்குருவி தினத்தை அனுசரிக்கத் தொடங்கியது.
சிட்டுக்குருவிகள் அழகான சிறியப் பறவைகள் என்பதை விட அதற்கும் மேலான ஒரு மதிப்பினைக் கொண்டுள்ளன.
நமது சுற்றுச்சூழல் அமைப்பில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட வெவ்வேறு சிட்டுக்குருவி இனங்கள் உள்ளன.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்திற்கான அதிகாரப்பூர்வ கருத்துரு "நான் சிட்டுக் குருவிகளை நேசிக்கிறேன்" (I Love Sparrows) என்பதாகும்.