TNPSC Thervupettagam

உலக சிட்டுக்குருவி தினம் - மார்ச் 20

March 21 , 2018 2439 days 939 0
  • நகர்ப்புற சுற்றுச்சூழலில் உள்ள  வீட்டுக் குருவிகள் மற்றும் பிற பொதுவான பறவைகளினைப் பற்றியும், அவற்றிற்கு உள்ள அச்சுறுத்தல்களைப் பற்றியும்  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக  ஆண்டுதோறும் மார்ச்-20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம்  (World Sparrow Day - WSD) கொண்டாடப்படுகின்றது.
  • பிரான்ஸ் நாட்டினுடைய Eco-Sys ஆக்சன் பவுண்டேஷன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள  பிற    தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடனானக் கூட்டிணைவோடு  நேச்சர் ஃபார் எவர் சொசைட்டி ஆஃப் இந்தியா  அமைப்பால் (Nature Forever Society of India-NFSI) தொடங்கப்பட்ட ஓர் சர்வதேசத் தொடக்கமே  உலக சிட்டுக்குருவி தினமாகும்.
  • குருவிகள் மற்றும் நகர்ப்புறத்தினுடைய   பல்வகைத் தன்மையை     பாதுகாக்க வேண்டியத்  தேவையை  முக்கியத்துவம் கொடுத்து அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கு ஓர் சர்வதேச மேடையாக இத்தினத்தைப் பயன்படுத்துவதே, உலகச் சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுவதின்  நோக்கமாகும்.
  • 2010-ஆம் ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் முதல் உலக சிட்டுக்குருவி தினம்   கொண்டாடப்பட்டது.

  • பறவைகளில் முக்கியமாக வீட்டுக்குருவிகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு 2012ஆம் ஆண்டு டெல்லி மாநில அரசானது “குருவிகளின் எழுச்சி” (Rise of Sparrows) எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
  • குருவிகளின் பாதுகாப்பிற்காக முந்தைய டெல்லி அரசானது குருவிகளை “மாநிலப் பறவையாக” அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்