உலக சிந்தனை தினம் ஆனது, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களைக் கொண்டாடுகிறது.
இந்த நாள் ஆனது, உலகளாவிய நட்பை வளர்ப்பது, உலகளாவியப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் இளம் பெண்கள் மிகவும் வலுவான தலைவர்களாகவும் ஒரு மாறுதல் மிக்க முகவர்களாகவும் மாறுவதற்கான அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் 1926 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற 4வது சர்வதேச பெண் வழிகாட்டி / பெண் சாரணர்கள் மாநாடு முதல் அனுசரிக்கப்படத் தொடங்கியது.
இந்த நாள் ஆனது, ஆண் சாரணர்களின் நிறுவனர் லார்ட் பேடன்-பவல் மற்றும் அவரது மனைவி உலகத் தலைமை வழிகாட்டி ஓலாவ் பேடன்-பவல் ஆகியோரின் பிறந்தநாள் ஆகும்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Our Story" என்பதாகும்.