உலக சிறுநீரக தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை நிகழும் ஒரு வருடாந்திர உலக விழிப்புணர்வு மற்றும் கல்வி நிகழ்ச்சியாகும்.
இந்த ஆண்டின் மார்ச் 14 ஆம் தேதி உலக சிறுநீரக தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இத்தினமானது சிறுநீரக நலத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதைக் குறிக்கிறது.
“அனைத்து இடத்திலும் அனைவருக்குமான சிறுநீரக நலம்” என்ற கருத்துருவுடன் சிறுநீரக நோய், ஏற்றத் தாழ்வு மற்றும் சுகாதார நலத்தை அணுகல் குறித்த பிரச்சனைகள் மீது இந்த ஆண்டின் பிரச்சாரமானது கவனத்தைச் செலுத்துகிறது.