ஏப்ரல் 20 அல்லது ஏறத்தாழ அதையொட்டிய தேதிகளில் உலக சீன மொழி தினத்தை ஐக்கிய நாடுகள் அனுசரிக்கின்றது.
இது யுனெஸ்கோவினால் 2010 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
இத்தினத்தின் நோக்கம் பன்மொழி வழக்கு மற்றும் கலாச்சார பன்மைத்துவம் ஆகியவற்றை அனுசரிப்பதாகும்.
மேலும் இந்த நாளானது ஐக்கிய நாடுகள் அமைப்பு முழுவதும் பயன்படுத்தப்படும் 6 அலுவல் ரீதியிலான மொழிகளையும் (ரஷ்ய மொழி, ஆங்கில மொழி, ஸ்பெயின் மொழி, அரபி மொழி, பிரெஞ்சு மொழி, சீன மொழி) சமமாக ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.