TNPSC Thervupettagam

உலக சுகாதார அமைப்பின் வெளியுறவு கணக்குத் தணிக்கையாளர்

June 2 , 2023 415 days 297 0
  • 2024 முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டு காலத்திற்கு உலக சுகாதார அமைப்பின் வெளியுறவு கணக்குத் தணிக்கையாளராக இந்தியாவின் (CAG) தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளரான கிரிஷ் சந்திர முர்மு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
  • இந்தியாவின் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் தற்போது உலக சுகாதார அமைப்பினைத் தவிர, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (2020-2025), சர்வதேச அணுசக்தி முகமை (2022-2027), இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பு (2021-2023) மற்றும் உலக நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம் (2020-2022) ஆகியவற்றிற்கான வெளியுறவு கணக்குத் தணிக்கையாளராக உள்ளார்.
  • தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் ஐக்கிய நாடுகள் சபையின் வெளியுறவுத் தணிக்கையாளர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
  • அவர் உயர் நிலைத் தணிக்கை நிறுவனங்களின் சர்வதேச அமைப்பு மற்றும் ASOSAI ஆகியவற்றிற்கான ஆளுகைக் குழுவின் ஒரு உறுப்பினராகவும் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்