உலக சுகாதார அமைப்பு - உலகளாவியப் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு நெருக்கடி
March 17 , 2025 14 days 73 0
2020 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும், கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பாக உள்ள தடுக்கக் கூடிய காரணங்களால் சுமார் 800 பெண்கள் உயிரிழந்தனர் என்ற நிலையில் இது ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு மரணத்திற்குச் சமமாகும்.
2020 ஆம் ஆண்டில், உலகளவில் 287,000 மகளிர் பேறுகால உயிரிழப்பு காரணங்களால் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில், உலகளாவியப் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் (MMR) ஆனது, 100,000 பிறப்புகளுக்கு 223 உயிரிழப்பாக இருந்தது.
உலகளவில், மிகவும் பெரும்பாலான கர்ப்பம் தொடர்பான தொற்று உயிரிழப்புகள் ஆனது பிரசவத்திற்குப் பிறகு 42 நாட்கள் வரை நீடிக்கின்றப் பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் நிகழ்ந்தன.
நிலையான மேம்பாட்டு இலக்குகளின் 3.1 என்ற இலக்கு ஆனது, 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய MMR விகிதத்தினை 100,000 நேரடிப் பிறப்புகளுக்கு 70க்கும் குறைவாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.