1948 ஆம் ஆண்டில் இந்த நாளன்று தான் உலக சுகாதார அமைப்பானது நிறுவப்பட்டது.
எந்தவொரு நாட்டின் அரசாங்கத்தின் தலையீடும் இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் மிகவும் சுதந்திரமாக நன்குச் செயல்படுவதற்காகவும் உலக சுகாதார அமைப்பானது நிறுவப்பட்டது.
இந்தத் தினமானது பல்வேறு சுகாதாரப் பிரச்சனைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்காகவும், தரமான சுகாதாரத்திற்கான ஒரு உலகளாவிய அணுகலுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'எனது ஆரோக்கியம், எனது உரிமை' என்பதாகும்.