உலக சுகாதார நிறுவனத்தின் (WHO - World Health Organization) ஆதரவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதியன்று உலக சுகாதார தினமானது சர்வதேச சுகாதார விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று WHO உருவாக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டானது உலக சுகாதார நிறுவனத்தின் 70-வது ஆண்டுக் கொண்டாட்டத்தின் நிறைவைக் குறிக்கிறது.
இந்த ஆண்டின் உலக சுகாதார தினத்தின் கருத்துருவானது “அனைவருக்கும் சுகாதாரம்” என்பதாகும்.
இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரத்தை நோக்கியப் பணியானது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தையும் உள்ளடக்கியது.
இந்தத் திட்டமானது சமுதாயத்தில் சமூகப் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர்களின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்ச ரூபாய் அளவிலான மருத்துவ சேவை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஒரு பகுதியாக 2030 ஆம் ஆண்டில் அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரத்தை அடைவதற்கு முயற்சிக்க அனைத்து ஐ.நா உறுப்பு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.