2019 ஆம் ஆண்டின் உலக சுகாதாரப் புள்ளியியலானது ஏப்ரல் 07 அன்று உலக சுகாதாரத் தினத்துடன் ஒன்றிப் பொருந்துவதற்காக உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டது.
முதன்முறையாக உலக சுகாதாரப் புள்ளியியலானது பாலினத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உலகில், குறிப்பாக வளமிக்க நாடுகளில் ஆண்களை விட பெண்கள் அதிக வாழ்நாளைக் கொண்டுள்ளனர்.
உயிரியியல், சுற்றுச் சூழல், சமூகக் காரணிகள், தேவையினால் ஏற்படும் சில தாக்கங்கள் மற்றும் சுகாதாரச் சேவைகளை எடுத்துக் கொள்வது ஆகியவை இதற்குக் காரணங்களாகும்.
2000 மற்றும் 2016 ஆண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் உலகில் பிறப்பின் போதான வாழ்நாள் எதிர்பார்ப்பானது 66.5 ஆண்டுகளிலிருந்து 5.5 சதவிகிதம் அதிகரித்து 72.0 ஆண்டுகளாக உள்ளது.