TNPSC Thervupettagam

உலக சுகாதாரப் புள்ளிவிவரங்கள் 2023

May 24 , 2023 422 days 325 0
  • பெருந்தொற்று காரணமாக உலகளவில் மொத்தம் 336.8 மில்லியன் ஆயுள் ஆண்டுகள் இழக்கப் பட்டுள்ளன.
  • உலகளவில், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 14.9 மில்லியன் அதிகமான இறப்புகள் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.
  • முக்கிய சுகாதார குறிகாட்டிகளில் ஒன்றான சுகாதார ரீதியான முன்னேற்றத்தில், 2015 ஆம் ஆண்டு முதல் குறிப்பிடத்தக்க அளவில் தடைப்பட்டுள்ளது
  • தொற்று நோய் அல்லாத நோய்கள் (NCD) மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் அச்சுறுத்தலையும் உலக நாடுகள் எதிர்கொண்டு வருகிறது.
  • 2000 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், உலகளாவிய பேறுகால இறப்பு விகிதத்தின் வருடாந்திர குறைவு விகிதமானது (ARR) 2.7 சதவீதமாக இருந்தது.
  • 3.2 சதவீதமாக இருந்த (2000-2009) பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தின் வருடாந்திர குறைவு விகிதமானது  2.2 சதவீதமாக (2010-2021) குறைந்துள்ளது.
  • 2000 ஆம் ஆண்டில், உலகளாவிய மோசமான உடல்நிலை, குறைபாடு மற்றும் முன் கூட்டிய இறப்பு ஆகியவை காரணமாக இழக்கப்பட்ட ஆயுட்காலங்களில் (1.3 பில்லியன் ஆயுள் ஆண்டுகள்) 47 சதவீத இழப்புகள் ஆனது தொற்று நோய் அல்லாத நோய்கள் காரணமாக ஏற்பட்டுள்ளன.
  • 2019 ஆம் ஆண்டிற்குள், தொற்று நோய் அல்லாத நோய்கள் 63 சதவீதம் இழப்பினை (1.6 பில்லியன் ஆயுள் ஆண்டுகள்) ஏற்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்