உலக வர்த்தக அமைப்பு (WTO), சர்வதேச வர்த்தக மையம் (ITC) மற்றும் UN வர்த்தகம் மற்றும் மேம்பாடு (UNCTAD) அமைப்பு ஆகியவற்றால் 2024 ஆம் ஆண்டு உலக சுங்க வரி விவரங்கள் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலக வர்த்தக அமைப்பு (WTO) நாடுகளில் இறக்குமதி குவிப்பு தடுப்பு வரிகளைத் அறிமுகப் படுத்தி, அதனை விதிப்பதில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது நாடாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் சுங்க வரிகள் அல்லாத நடவடிக்கைகளின் பயன்பாடு அதிகரித்த போதிலும், 2022 ஆம் ஆண்டில் 18.1 சதவீதமாக இருந்த இந்தியாவின் சராசரி சுங்க வரிகள் 17 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், இந்தியா 45 இறக்குமதி குவிப்புத் தடுப்பு விசாரணைகளைத் தொடங்கி, 14 வழக்குகளில் வரிகளை விதித்தது.
ஆனால் அமெரிக்கா சுமார் 64 விசாரணைகளைத் தொடங்கி 14 வழக்குகளில் கூடுதல் வரிகளை விதித்தது.
இந்தியாவில் மொத்தம் 133 என்ற அளவில் இறக்குமதி குவிப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டு, 418 தயாரிப்புகள் மீது வரி விதிக்கின்றது.
2022 ஆம் ஆண்டில், இந்தியா 29 இறக்குமதி குவிப்பு தடுப்பு விசாரணைகளுடன் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர் நாடுகளுள் முன்னிலையில் உள்ளது.
2022 ஆம் ஆண்டில் 14.7 சதவீதமாக இருந்த வேளாண்மை சாராத இறக்குமதிக்கான சராசரி சுங்க வரியானது 2023 ஆம் ஆண்டில் 13.5 சதவீதமாக குறைந்துள்ளது.
வேளாண் சார் சுங்க வரிகளும் 39.6 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாகக் குறைந்துள்ளது.