2015 ஆம் ஆண்டு டிசம்பரில் ஐ.நா. பொதுச் சபையானது நவம்பர் 5 ஆம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அறிவித்தது.
“அரிசி ஏடுகள் பற்றி எரிதல்” என்ற பொருள் கொண்ட ஜப்பானிய கதையான “இனமுரா-நோ-ஹி”யை கௌரவிப்பதற்கான வருடாந்திர அனுசரிப்பிற்காக இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் உலக சுனாமி விழிப்புணர்வு தினமானது சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் மற்றும் ‘சென்டாய் ஏழு பிரச்சாரம்’ ஆகியவற்றுடன் ஒன்றிப் பொருந்துகிறது.
மேலும் பேரிடர் அபாய குறைப்பிற்கான சென்டாய் செயல்திட்டத்தின் இலக்கு ‘C’யின் மீதும் இத்தினம் கவனத்தை செலுத்துகிறது.
பேரிடர் அபாய குறைப்பிற்கான செயல்திட்டத்தின் நோக்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான நேரடி பேரிடர் பொருளாதார இழப்பைக் குறைப்பதாகும்.