2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இந்த நாளை நியமித்தது.
இது சுனாமி விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் சுனாமி அபாயத்தைப் பெருமளவில் குறைப்பதற்கான புதுமையான அணுகுமுறைகளைப் பகிர்ந்து கொள்வதையும் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில், 58 சுனாமிகள் சுமார் 260,000க்கும் அதிகமான உயிர்களை பலி வாங்கியுள்ளன.
நவம்பர் 05 ஆம் தேதியானது, “இனமுரா-நோ-ஹி” (The Burning of the Rice Sheave) என்ற நிகழ்வை நினைவு கூரும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1854 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், ஜப்பானிய கிராமவாசி ஒருவர் தனது அண்டை வீட்டாருக்கு எச்சரிக்கையளிப்பதற்காக வேண்டி மலை உச்சியில் இருந்த தனது நெல் வைக்கோல் போர்களுக்கு தீ வைத்து, நெருங்கி வந்த சுனாமியில் இருந்து அவர்களின் உயிரைக் காப்பாற்றினார்.