சுனாமி ஆழிப்பேரலைகளைப் பற்றி உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டு தோறும் நவம்பர் 5-ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2017ஆம் ஆண்டிற்கான உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தின் கருத்துரு – ‘பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை குறைத்தல்’.
ஜப்பானில் 1854-ல் நடைபெற்ற இனாமுரா-நோ-ஹி (இனாமுரா எரிப்பு) சம்பவத்தின் வருடாந்திர நினைவு நாளோடு ஒத்துப்போகும் வகையில் நவம்பர் 5-ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக ஐ.நா.பொது அவையால் அறிவிக்கப்பட்டது.