TNPSC Thervupettagam

உலக சுற்றுச் சூழல் தினம்

February 22 , 2018 2468 days 1207 0
  • ஜூன் 5 அன்று கொண்டாடப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தை இவ்வாண்டு உலக ஒருங்கிணைப்பாளராக (Global Host) இந்தியா நடத்த உள்ளது.
  • இதற்கான நோக்க கடிதம் ஒன்றில் (Letter Of Intent-LOI) இந்தியாவும், ஐ.நா சுற்றுச் சூழல் அமைப்பும் (UN Environment) கையெழுத்திட்டுள்ளன.
  • “பிளாஸ்டிக் மாசுபாடுகளை வெல்லுதல்” (Beat Plastic Pollution) என்பது இவ்வாண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருத்துருவாகும்.
  • 2018-ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினம் நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்து அரசு அமைப்புகளிலும் கொண்டாடப்பட உள்ளது.
  • இதனோடு டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் ஒரு வார கால சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பிரச்சாரமும், மாசுபாடு தணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
  • 1972 ஆம் ஆண்டு மனித சுற்றுச்சூழல் மீதான ஐ.நா மாநாட்டின் தொடக்கத்தினை குறிக்கும் விதமாக ஐ.நா பொது அவையால் உலக சுற்றுச்சூழல் தினம் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்