உலக சுற்றுச்சூழல் தினம் (WED) - ஜூன் 05
June 8 , 2022
810 days
388
- இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினால் (UNEP) ஏற்பாடு செய்யப் படுகிறது.
- 2022 ஆம் ஆண்டின் இத்தினமானது, 50வது உலக சுற்றுச்சூழல் தினத்தினைக் குறிக்கிறது.
- இந்த ஆண்டு இத்தினத்தினை ஸ்வீடன் நடத்துவதோடு இதன் கருத்துரு, 'ஒரே ஒரு பூமி' என்பதாகும்.
- ஒரே ஒரு பூமி என்பது 1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் மாநாட்டின் ஒரு முழக்கமாக இருந்தது.
- மனித சுற்றுச்சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு அல்லது ஸ்டாக்ஹோம் மாநாடு 1972 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
- சுற்றுச்சூழலை முக்கிய நிகழ்ச்சி நிரலாகக் கொண்ட முதல் உலக மாநாடு இதுவாகும்.
- இந்த மாநாடானது, "ஆரோக்கியமான சூழலில் வாழ்வதற்கான ஒரு உரிமையை" ஒரு "அடிப்படை மனித உரிமை" என்று அறிவித்தது.
- இதன் மூலம், உலக சுற்றுச்சூழல் தினம் என்ற கருத்தானது முறைப்படுத்தப்பட்டது.
- மாரிஸ் ஸ்ட்ராங்க் என்பவரால் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினை உருவாக்கவும் இந்த மாநாடு வழி வகுத்தது.
Post Views:
388