சுற்றுச்சூழலின் பாதுகாப்பிற்கு பாதுகாப்புச் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழலைப் பற்றி உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகின்றது.
இத்தினமானது முதன் முதலாக 1974-ல் கொண்டாடப்பட்டது.
2018 ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருத்துரு “பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழித்தல்” (Beat Plastic Pollution).
ஒவ்வொரு ஆண்டினுடைய உலக சுற்றுச்சூழல் தினமும் வெவ்வேறு நாடுகளினால் நடத்தப்படுகின்றது. இத்தினத்தை நடத்தும் நாடுகளில் அதிகாரப் பூர்வ கொண்டாட்டம் நடைபெறும்.
2018 ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினம் இந்தியாவால் கொண்டாடப்படுகின்றது.
கனடா நாடானது 2017 ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுச் சூழல் தினத்தின் கொண்டாட்டத்தினை நடத்திய உலக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நாடாகும் (Global Host country).